Tuesday, March 19, 2013

இதயம் காப்போம் - தெரிந்துகொள்வோம்







இதயம் காப்போம்

v  மனித உறுப்புகளிலேயே இதயம் மிகவும் இன்றியமையாத உறுப்பு.

v  ஆண்களுக்கு 450 கிராமும், பெண்களுக்கு 350 கிராமும் எடை உள்ளதாக இருக்கும்.

v  மனித உடலின் தசைகளிலே மிகவும் உறுதியானது இதயத் தசை.

v  இது ஒரே சீராக தினசரி ஒரு லட்சம் தடவைக்கு மேல் துடித்து, மனித உடலில் இருக்கும் சுமார் 1 லட்சம் கிலோ மீட்டர் நீளமுள்ள ரத்த நாளங்களில் 15 ஆயிரம் லிட்டர் ரத்தத்தைச் செலுத்துகிறது.

v  ஒருவர் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாலும் சரி, ஓய்வெடுத்த நிலையில் இருந்தாலும் சரி, ரத்த நாளங்களில் தேவையான ரத்தமும், ஆக்சிஜனும் சதா ஓடிக் கொண்டே இருக்கும்.

v  ஒருவர் ஓய்வாக இருக்கும் போது இதயம் 1 நிமிஷத்துக்கு 60 முதல் 80 தடவை வரை ஒரே சீராகத் துடித்து இயங்குகிறது.

v  உடல் பயிற்சி செய்யும் போது இரு மடங்கு வேகத்துடன் உடலின் இயக்கத்துக்கு ஏற்ற படி ஒரு நிமிஷத்துக்கு 4 முதல் 6 மடங்கு அதிகமான ரத்தத்தைச் செலுத்துகிறது.

v  ஒருவர் உணர்ச்சி வசப்படும் போதும், சாப்பிடும் போதும், அதிகக் குளிரால் தாக்கப்படும் போதும், கடுமையாகச் செயல் படும் போதும் இதயத்துக்கு அதிகமான ஆக்சிஜன் தேவைப் படுகிறது.

v  உடலின் இதர உறுப்புகளைப் போல, இதய இயக்கத்துக்கும் சுத்தமான ரத்தம் தேவைப் படுகிறது.

v  இதயத்துக்கு வேண்டிய சுத்த ரத்தம் இரு பெரிய நாளங்கள் அவற்றின் கிளைகள் மூலம் வந்து சேருகிறது.

மாரடைப்பு
Ø  மாரடைப்பு நோய்க்குப் பயப்படாதவர்கள் இல்லை. உலகில் உயிரிழப்புக்கு முக்கியக் காரணமாக இது இருக்கிறது.

Ø  ஒரு காலத்தில் வயது வந்தவர்களையும், வசதி படைத்தவர்களையும் தான் பாதிக்கும் என்ற நிலை இருந்தது.

Ø  இன்று ஏழை, எளியவர்களும் இளம் வயதினரும் இந்த நோயால் பாதிக்கப் படுகின்றனர்.

Ø  இந்தியாவில் மாரடைப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளது.

Ø  இதயத்தின் ரத்த நாளங்களைத் தாக்கும் மாரடைப்பு நோய் திடீரென்று தோன்றுவது அல்ல.

Ø  20 ஆண்டுக்கும் மேல் எந்த அறிகுறியும் இல்லாமல் வளரும்.

Ø  ரத்த நாளத்தின் உட்புறச் சுவர் பாதிக்கப் படும்போது இந்நோய் ஆரம்பமாகிறது.
Ø  உட்புறச் சுவர் பாதித்த பின் மிருதுவான பகுதி கரடு முரடாகிறது. அப் பகுதியில் ரத்தத்தில் மிதக்கும்

Ø  கொழுப்புச் சத்துகள் படிந்து கொண்டே வந்து ரத்த ஓட்டப் பாதையைக் குறுகலாக்கி வழக்கமான ரத்த ஓட்டத்தைக் தடை செய்கிறது.

Ø  இதற்கு மேல் நாளத்தில் ஒரு விறைப்போ, பாதிக்கப் பட்ட இடத்தில் உறை கட்டிப் படிதலோ ஏற்பட்டால் ரத்த ஓட்டம் முழுவதுமாகத் தடைப்பட நேரிடும்.

Ø  மார்பு இறுக்கம் மாரடைப்புக்கு எச்சரிக்கை

Ø  ஒருவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது அவருடைய ரத்த நாளங்களில் அடைப்பு இருந்தாலும் கூட இதயத்துக்குத் தேவையான சுத்த ரத்தம் கிடைத்து விடுகிறது. ஆகவே வியாதிக்கான எந்த அறிகுறியும் தென்படுவது இல்லை.

Ø  ஆனால் ஒருவர் சக்திக்கு மீறிய செயலில் ஈடுபடும் போது நாளங்கள் குறுகி இருப்பதால் இதயத்துக்குத் தேவையான ரத்தம் கிடைக்காமல் நெஞ்சுவலி, மார்பு இறுக்கம் போன்ற அறி குறிகள் தோன்றுகின்றன.

Ø  பின் ஓய்வெடுக்கும் போது இதயத்துக்குத் தேவையான ரத்தமும் ஆக்சிஜனும் கிடைத்து சம நிலை ஏற்படுகிறது. எனவே நெஞ்சுவலி மறைத்து விடுகிறது.

Ø  மார்பு இறுக்கம் ஒரு நோயல்ல. அது ரத்த நாளங்களின் பாதிப்பை உணர்த்தும் ஓர் அறிகுறி.

நெஞ்சு வலி
v  மார்பு இறுக்கத்தின் முக்கிய அம்சம் நெஞ்சு வலி. நெஞ்செலும்பின் கீழ்ப் பாகத்தில் பின் புறம் தோன்றினாலும் வலி நெஞ்சில் மாத்திரம் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இவ் வலி இரு தோள்களுக்கும் முக்கியமாக இடது தோளுக்கும் அங்கிருந்து கைகள், கழுத்து, தாடை, முதுகுப் பகுதிகளுக்கும் பரவலாம்.

v  சில சமயங்களில் குறிப்பிட்ட பகுதியில் பாரம், இறுக்குதல், அஜீரணம் என்று கூட நோயாளி வர்ணிக்கலாம்.
 
v  இந்த அசௌகரியம் சில நிமிஷங்களே நீடிக்கும். மருந்துகளும் ஓய்வும் இவ் வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.

v  மார்பு இறுக்கத்தினால் இதயத் தசை சேதம் அடை படுவதில்லை. இந்தப் பாதிப்புக்கு உள்ளானவர்களின் ரத்த நாளங்களில் எந்த நேரத்திலும் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படலாம்.

v  எனவே மருத்துவ சிகிச்சை மேற் கொள்வதற்கான முன் எச்சரிக்கை அறிகுறியே மார்பு இறுக்கம்.

v  சில நேரங்களில் மார்பு இறுக்கமா அல்லது மாரடைப்பா என்பதை டாக்டரால் தான் கண்டுபிடிக்க முடியும்.

v  இந்த அறிகுறியை உதாசீனப் படுத்தக் கூடாது. உடனே டாக்டர் உதவியை நாட வேண்டும்.

v  ஒருவருக்கு எப்போது மார்பு இறுக்கம் ஏற்பட்டாலும், செய்யும் வேலையை உடனே நிறுத்தி விட்டு ஓய்வெடுக்க வேண்டும். தாமதம் இல்லாமல் டாக்டர் ஆலோசனையைப் பெற வேண்டும்.

v  ரத்த நாளங்கள் மூலம் இதயத்துக்குச் செல்லும் ரத்தம் நீண்ட நேரத்துக்கு தடை பட்டால் இதயத் தசைகளுக்குச் சேதம் ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.

மாரடைப்பின் அறிகுறி
Ø  கடுமையான மார்பு இறுக்கம் போன்ற வலி 15 நிமிஷங்களுக்கு மேல் நீடிக்கும்.

Ø  நெஞ்சு வலியுடன் உடலெங்கும் திடீர் வியர்வை, மூச்சுத் திணறல், வாந்தி, பலவீனம், தலைசுற்றல், மயக்கம், வேகமான நாடித் துடிப்பு முதலியனவும் இருக்கும்.

Ø  அறிகுறிகளே இல்லாமல் மாரடைப்பு ஏற்படும். இதை "சைலன்ட் ஹார்ட் அட்டாக்" ( Silent Heart Attack) என்பார்கள். மாரடைப்பு ஏற்பட ஆரம்பித்த முதல் ஒரு மணி நேரம் (Golden Hour) மிக முக்கியமான காலகட்டம் :

Ø  மாரடைப்புக்கான நெஞ்சு வலி போன்ற அறிகுறி தெரிந்தவுடன் குறிப்பாக மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு உள்ளவர்கள் உடனடியாக டாக்டர் உதவியை நாட வேண்டும். கால தாமதம் உயிருக்கு ஆபத்து.

Ø  மாரடைப்பு அறிகுறி தெரிந்த உடனே அதே இடத்தில் ஓய்வெடுத்து, உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல உதவி நாட வேண்டும்.


Ø  மாறாக பாதிக்கப் பட்டவர் வலியுடன் தானாக சைக்கிளை, இரு சக்கர வாகனத்தை, காரை ஓட்டிச் செல்வது மிகவும் ஆபத்து.

Ø  மார்பு இறுக்கத்துக்கான டாக்டர் அறிவுரைப் படி முன்பே மாத்திரை சாப்பிடுபவராக இருந்தால் நாக்கின் அடியில் நைட்ரேட் மாத்திரை வைக்கலாம். இதனால் வலி குறைய வாய்ப்பு உள்ளது.

Ø  ஒரு சிலருக்கு மாரடைப்பு ஆரம்பிக்கும் போது தீவிரமாக இருக்கும். அதாவது பெரிய ரத்த நாளம் ஆரம்பத்திலேயே அடைபட்டு அதனால் பாதிக்கப்படும்


Ø  இதயத் தசை கடினமாக இருக்குமானால் அல்லது அடைப்பு இரண்டு மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் ஏற்படுமானால் இதயம் திடீரென நின்று விடக்கூடும்.எப்படி காரில் பெட்ரோல் அடைபட்டால் என்ஜின் நின்று போகிறதோ அது போல.

Ø  தீவிர மாரடைப்பு வந்தால் முதல் அறிகுறியே திடீர் மயக்கமாக இருக்கலாம்.

நின்று போன இதயத்தை இயங்க வைத்தல்
அச் சூழலில் அருகே உள்ளவர்கள் கூட்டம் போட்டு வேடிக்கை பார்க்காமல், அவரைச் சமமான தரையிலே படுக்க வைத்து இதயத் துடிப்பு, நாடித் துடிப்பு ஆகியவற்றைப் பரிசோதித்து விட்டு, துடிப்பு இல்லை என்றால் மார்பின் இடது புறம் வேகமாகத் தட்டி, லேசாக அமுக்கிக் கொடுத்தால், சிறிது நேரம் வாய் மூலம் செயற்கை சுவாசம் செய்தால் இதயம் மீண்டும் இயங்கி உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு.

ü  மாறாக முகத்தில் தண்ணீர் ஊற்றி, கூட்டம் சேர்ந்து கால தாமதம் செய்தால் உயிரிழப்பு ஏற்படுவது நிச்சயம்.

ü  ஒவ்வொரு குடும்பத்திலும் இது போன்ற முதலுதவியை யாரேனும் தெரிந்து வைத்திருத்தல் நல்லது.

ü  மாரடைப்பு வந்த முதல் ஒரு மணி நேரத்தில் கிடைக்கும் மருத்துவ சிகிச்சை தான் இதயத் தசை பழுதடையாமல் தடுக்கவும், அதன் பின் விளைவுகளையும், உயிரிழப்பைத் தடுக்கவும் உதவும்.

ü  பல வருஷங்களுக்கு முன்பெல்லாம், மாரடைப்புக்கு குறைந்தது 3 மாத ஓய்வு தேவை என்ற நிலை இருந்தது. நவீன சிகிச்சை முறையினால் அந்த நிலை மாறி ஓரிரு வாரத்திலேயே குணப் படுத்தி மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வர முடிகிறது.

ü  மாரடைப்பு வந்தவர்கள் விரைவில் குணமடைவதற்கான வாய்ப்பு. அது எத்தனை ரத்த நாளங்களைப் பாதித்துள்ளது என்பதைப் பொருத்தது.

ü  ஒன்று அல்லது இரண்டு ரத்தக் குழாய்களில் மட்டும் அடைப்பு இருந்தால் ஒரு வாரத்திலேயே குணமடைந்து வீடு திரும்ப முடியும். இரண்டு அல்லது மூன்று ரத்தக் குழய்களில் அடைப்பு ஏற்பட்டு இதயத் தசை அதிகம் பழுதடைந்திருந்தால் குறைந்தது 2 வாரம் மருத்துவ மனையில் சிகிச்சை மேற்கொள்ள நேரிடலாம்.

ü  மாரடைப்பு வந்த எல்லா நோயாளிகளுக்கும் மிகவும் முக்கியமானது நல்ல ஓய்வு.

ü  சுலபமான ஜீரணிக்கக் கூடிய ஆகாரங்கள், சுத்தமான பிராண வாயு நிறைந்த காற்று, மன உளைச்சலைக் குறைக்கக் கூடிய மருந்துகள், ரத்த நாளத்தை விரிவாக்கும் மருந்துகள், ரத்தக் குழாயில் அடைப்பைக் கரைக்கிற அல்லது ரத்தம் குழையும் தன்மையைக் குறைக்கிற மருந்துகள், இதயத் துடிப்பைச் சீர்படுத்தும் மருந்துகள், மானிட்டர் ஈசிஜி மூலம் கண்காணித்துக் கொடுக்கப் படும்.

ü  ரத்த அழுத்தம், மாரடைப்புக்கான அறிகுறிகள், இதயத் தசையில் பாதிப்பு ஆகியவற்றை ஈசிஜி , எக்கோ ஸ்கேன் மூலம் கண்காணித்த பின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து மற்ற பிரிவுக்கு மாற்றப் படுவார்கள்.

ü  வீடு செல்லும் போது உணவு உண்ணும் முறைகள், வீட்டிலே செய்யக் கூடிய உடற் பயிற்சி முறைகள், உட்கொள்ளும் மருந்துகள் முதலியவை பற்றி அறிவுரை கூறப்படும்.

ü  எந்தெந்த ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளது. ஒரே ரத்தக் குழாயில் ஓரிடத்தில் சிகிச்சை மூலம் அடைப்பை நீக்க இயலுமா, பைபாஸ் அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டுமா என்பதைத் தெரிந்து கொள்ள ஆஞ்சியோகிராம் சோதனை மிகவும் அவசியம்.
 
ü  ஒன்று அல்லது இரண்டு ரத்தக் குழாய்களில் ஒரு குறுகிய இடத்தில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்திருந்தால் அவர்களுக்கு பலூன் சிகிச்சை சிறந்தது.
ü  மூன்று ரத்தக் குழய்களில் அடைப்பு அதிகம் இருந்தாலோ, பெரிய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு பலூன் சிகிச்சைக்கு ஏற்றதாக இல்லாத ரத்த நாள அமைப்புள்ள நோயாளிக்கு பைபாஸ் அறுவைசிகிச்சையே சிறந்தது.

ü  பலூன் சிகிச்சை, பைபாஸ் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னும், கவனக் குறைவால் மாரடைப்பு திரும்ப வருவதற்கான காரணங்கள் தொடருமானால் மீண்டும் மாரடைப்பு வர வாய்ப்பு உண்டு.

ü  எனவே மாரடைப்பு வருவதற்கான காரணங்களைத் தெரிந்து கொண்டு அதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

ü  புகை பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அதிகமாகச் சேருதல், மன உளைச்சல், சர்க்கரை நோய், உடல் பருமன், குணாதிசயம், உட்கார்ந்த .இடத்திலேயே வேலை செய்தல் முதலியவை மாரடைப்பு வருவதற்கு முக்கியக் காரணங்கள்.

ü  வயது அதிகமாக அதிகமாக மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு மாரடைப்பு கடந்த காலத்திலேயே வந்திருக்குமானால் அந்த சந்ததியினரைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் வர வாய்ப்பு அதிகம் உண்டு. அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ü  30 வயதைக் கடந்த ஒவ்வொருவரும் ஆண்டு தோறும் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ü  ரத்த அழுத்தம், ஈசிஜி, எக்கோ, ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பின் அளவு ஆகியவற்றைக் கண்காணித்துக் கொள்ள வேண்டும்.

ü  புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாக புகையை நிறுத்தி விட வேண்டும்






மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க. 



விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line







Please Contact for Appointment