கேள்வி: என் ஆண் குறி வளைந்து இருக்கிறது. கிட்டத்தட்ட
பத்து-பதினைந்து டிகிரி வளைந்து காணப்படுகிறது. என் வயது இருபத்தி
மூன்று, இதனால்
எனக்கு ரொம்ப அவமானமாக இருக்கிறது. என் ஆண் குறி
வளைந்திருப்பதால், எனக்கு
பயமாக இருக்கிறது. ஒரு வேளை என் வளைந்த ஆண் குறியைப்
பார்த்து யாராவது கிண்டலோ, கேலியோ
செய்து விட்டால் என்ன செய்வது? இது
ஒரு நோயா? இந்தப்
பிரச்சனைக்கு தயவு செய்து உடனே தீர்வு சொல்லுங்கள்.
பதில்: இல்லை, உங்களுக்கு
உடலில் எந்தக் கோளாறும் இல்லை. இது ஒரு நோய் கிடையாது. பெரும்பாலான ஆண்களுக்கு, ஆண் குறி, இடது
பக்கமோ, வலது பக்கமோ, மேல்
நோக்கியோ வளைந்தே தான் இருக்கும். ஒருசில
ஆண்களுக்குத்தான் ஆண் குறி வளையாமல், நேராக
இருக்கும்.
இது தவிர சுய இன்பம் செய்தால், ஆண் குறி வளைந்து விடும் என்று நம்பப் படுகிறது. இந்த
நம்பிக்கை ஆதாரமற்றது, மருத்துவர்கள்
இதை ஒப்புக் கொள்வதில்லை.
பெரும்பாலான பெண்களுக்கு, உங்கள்
ஆண் குறி
வளைந்திருப்பதை உடலுறவின் போது, உணரக்
கூட முடியாது. நீங்கள் வாய் வழி, பெண்ணுறுப்பு
வழி, புணர்ச்சி என்று எதை செய்தாலும் அவர்களால் எந்த வித
வித்தியாசத்தையும் காண முடியாது. இதனால், உங்கள்
துனை அருவருப்பு அடைவாள், அல்லது
கேலி செய்வாள் என்று வருத்தப் படுவதை விட்டு விடுங்கள்.
வெகு சில ஆண்களுக்கு, ஆண்
குறி 40 டிகிரிக்கு மேல் வளைந்து இருக்கும், இது Peyronie’s Disease எனப்படும் ஒரு நோயாகும். சரியான சிகிச்சை இதற்கு பலனளிக்கும். தகுந்த மருத்துவரை
நேரில் ஆலோசித்து உங்களின் சந்தேகங்களுக்கு விடை காணுங்கள்.
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை
அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line
--==--