Tuesday, March 19, 2013

உங்கள் இதயம் பாதுகாப்பாக இயங்க








மாரடைப்பு வராமல் தடுக்க
v  மாரடைப்பிற்கு இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புதான் காரணம். இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது மாரடப்பு ஏற்படுகிறது.
v  பக்க வாதத்திற்கு மூளைக்கு செல்லும் இரத்த நாளங்களில் அடைப்புகள் காரணம். பக்கவாதம் மனிதனை முடக்கி விடுகிறது.
v  இரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது இதயத்திற்கு செல்லும் இரத்தம் தடைபடுகிறது. இதனால், நெஞ்சுவலி, மாரடைப்பு ஏற்படுகிறது.
v  மூளைக்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்புகள் ஏற்படும்போது அது பக்கவாதமாக மனித வாழ்வை சீர்குலைக்கிறது.
v  இதயத்திற்கும் மூளைக்கும் இரத்தம் மற்றும் தேவையான சத்துக்களைக் கொண்டு செல்லும் இரத்த நாளங்கள் இதயத்தைப் போலவே சுருங்கி விரியும் தன்மை உடையது. அதனால்தான் அவற்றில் இரத்த ஓட்டம் நடைபெறுகிறது.
v  இரத்தக் குழாய்கள் சுருங்கி விரிய 'நைட்ரிக் ஆக்சைடு' என்ற இரசாயனப் பொருள் உதவுகிறது. இது நமது உடலிலேயே உற்பத்தி ஆகும் பொருள். இதுதான் இரத்தக் குழாய்களுக்குள் சென்று அவற்றை சுருங்கி விரிய உதவுகிறது.
v  உயர் இரத்த அழுத்தம் காரணமாகவும், குருதியில் கொழுப்புச் சத்து மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும்போது 'நைட்ரிக் ஆக்சைடு' சுரப்பது குறைகிறது.
v  மன இறுக்கமும், மனக்கவலையும் கூட நைட்ரிக் ஆக்சைடு சுரப்பதைக் கெடுக்கிறது.
v  புகை பிடிப்பது, மது அருந்துதல், அசைவ உணவுகளை அதிகளவு உட்கொள்வது போன்றவை கூட இந்த நைட்ரிக் ஆக்சைடு சுரப்பதைக் குறைக்கிறது.
v  நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி குறையும்போது இரத்தக் குழாய் சுருங்கி விரிவது குறையும். அப்போது இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிய தொடங்கும். கொழுப்பு சேர்ந்து குழாயை அடைத்து விடும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட வாய்ப்பாகிறது.

இரத்தக்குழாய் அடைப்புகள் வராமல் தடுப்பது எப்படி?
ü  இரத்த அழுத்தத்திற்கு சரியான மருந்துகள் உட்கொண்டு அதை சீராக வைக்கவும்.
ü  சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும்.
ü  கொழுப்பு நிறைந்த உணவுகளான நெய், வெண்ணெய், தேங்காய், எண்ணெய், முட்டை மஞ்சள் கரு, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி இவற்றைத் தவிர்க்கவும்.
ü  புகை மற்றும் மது அருந்துதலை தவிர்க்கவும்.
ü  எண்ணெயில் பொரித்த உணவுகளையும், நெய்யால் செய்த உணவுகளையும் தவிர்க்கவும்.
ü  உப்பு அளவோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.
ü  இனிப்பான பழங்கள், கிழங்குகள், பழச்சாறுகள் இவற்றை நீரிழிவு நோயாளிகள் எடுத்தல் கூடாது.
ü  மிக முக்கியமாக உடற்பயிற்சி. நாள்தோறும் காலை, மாலை அரை மணி நேரம் நடைபயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
ü  சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது போன்ற உடற்பயிற்சிகளை செய்யுங்கள்.
ü  உணவு வகைகளை அதிகம் உட்கொள்வதைக் குறையுங்கள்.

உங்கள் இதயம் பாதுகாப்பாக இயங்க வாழ்த்துகள்



மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க. 




விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line

Please Contact for Appointment