ஆவாரம்
பூ சில தகவல்கள்.
Ø ஆவாரம் பூ பார்க்கும் போது கண்ணுக்கு குளிர்ச்சி அளிக்கும்.
Ø உடல் சூட்டை ஆவாரம் பூ தணிக்கக் கூடியது.
Ø பூவுடன் பாசிப்பயிறு சேர்த்து அரைத்து உடம்பிற்குத் தேய்த்துக்
குளிக்கலாம். உடலிலுள்ள அரிப்பு நீங்க இவை நல்ல மருந்து.
Ø நரம்பு தளர்ச்சியை போக்க வல்லது.
Ø ஆவாரம் பூவுடன் நாவல் மர இலையை சேர்த்துப் பொடியாக்கி பசும்பாலில்
கலக்கிக் குடித்துவர சர்க்கரை வியாதி விலகி விடும். நாவல் இலைக்குப் பதில் வில்வ இலையையும்
சேர்க்கலாம்.
Ø வேரை குடிநீரிலிட்டுச் சாப்பிட்டுவர நீரிழிவு, ஆண்குறி எரிச்சல் தணியும். வேண்டுமானால்
இத்துடன் கற்கண்டு, பசுவின் பால் சேர்த்துக் கொள்ளலாம்.
Ø ஆவாரந்துளிர், கல்மதம், கொன்றைவேர் ஆகிய மூன்றையும் புளித்த மோரில் கலக்கிக் குடிக்க
நீரிழிவு நோய் நீங்கும். ஆவாரம், சீந்தில், தில்லைச்செடி இவைகளின் வேர், இலை, தண்டு, பூ முதலியவற்றை முறையே மூன்று, இரண்டு, ஒன்று எனும் எடையாகக் கொண்டு, இளவறுப்பாக வறுத்து ஒன்றிரண்டாக இடித்துப்
பொடியாக்கி அரைப்படிக்கு அரைப்படி நீரிட்டு, அரைக்கால் படியாகக் குடிநீர் செய்து அதில் பால் கூட்டி காலை, மாலை கொடுக்க நீரிழிவு போகும். நீரில்
சர்க்கரை அளவும் குறையும்.
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை
அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830