கேள்வி: மருத்துவர் அவர்களுக்கு எனக்கு விந்து சீக்கிரம் வெளியேறி விடுவதால்
என் மனைவியை திருப்தி படுத்த முடியவில்லை. இதற்கான தீர்வு என்ன? .
பதில்: முதலில் உங்களுக்கு துரித விந்து வெளியேற்றம் (Premature Ejaculation) என்ற பிரச்சனை
இருக்கிறதா என்று உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நிறைய பேர் அவர்களுக்கு
இந்தப் பிரச்சனை இருக்கிறதாக நினைத்துக் கொள்கிறார்களே தவிர, உண்மையில் அவர்களுக்கு இந்த பிரச்சனை
இருப்பதில்லை.
உங்களுக்கு
துரித விந்து வெளியேற்றம் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க ஒரு எளிய வழி:
Ø முதலில் ஒரு நாற்பத்து எட்டு மணி நேரங்களுக்கு, சுய இன்பத்திலோ, உடலுறவிலோ ஈடுபடாதீர்கள்.
Ø ஒரு தனியறையில் சுய இன்பம் செய்யுங்கள். இதனை நீங்களே செய்யுங்கள், உங்கள் துணையை சேர்த்துக் கொள்ள வேண்டாம்.
முக்கியமாக ஒரு கைக் கடிகாரத்தை வைத்து எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்கிறீர்கள் என்று
கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.
Ø நீங்கள் ஐந்து நிமிடங்களுக்கு மேல் தாக்குபிடித்தால், உங்களுக்கு இந்தப் பிரச்சனை இல்லை என்று
அர்த்தம்.
தீர்வு
வழிமுறைகள்:
இந்தப்
பிரச்சனையை தீர்க்க, நான்கு வழி முறைகள் உள்ளன.
உடற்பயிற்சி:
Pelvic Floor
Exercise எனப்படும் ஒருவகையான உடற்பயிற்சி நல்ல
பலனை அளிக்கும். இதை மருத்துவரின் ஆலோசனைப்படி செய்யலாம்.
மனோதத்துவ
முறை:
பெரும்பாலான
பேருக்கு துரித விந்து வெளியேற்றம் என்பது மனவியல் பிரச்சனை காரணமாகவே வருகிறது. அச்சம், தாழ்வு மனப்பான்மை, கவலை, தவிப்பு போன்ற உளவியல் பிரச்சனைகளே இதற்கு முக்கிய காரணம். நீங்கள்
ஒரு தகுந்த மன நல ஆலோசகரை அணுகினால், உங்களுக்கு உளவியல் முறைப்படி இதற்கு தீர்வு காண முடியும்.
கிரீம்கள் & மூலிகை எண்ணைகள்:
கிரீம்
அல்லது மூலிகை எண்ணையை உடலுறவிற்கு முன்னால்
உங்கள் ஆணுறுப்பின் மேல் தடவிக் கொள்ள வேண்டும். இவை நல்ல பலனலிக்கும். இருந்தபோதும்
மருத்துவரின் ஆலோசனைப்படியே இதை உபயோகிக்க வேண்டும்.
மருத்துவரை
அணுகுங்கள்:
இந்தத்
தீர்வு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக மேலே சொன்ன பயிற்சி எந்தப் பயனும் அளிக்கவில்லை
என்றால், நீங்கள் மருத்துவரை அணுகி இந்த விஷயத்தை
சொல்லுங்கள். பொது நோய் மருத்துவரை (General
Practitioner) அணுகாமல், நீங்கள் பாலியல் சிறப்பு மருத்துவரை அணுகுங்கள்.
அவர் உங்களைப் பரிசோதித்த பின்னர், உங்களுக்கு சிறந்த மருந்துகளை பரிந்துரைப்பார்.
ஹோமியோபதி
& சித்த மருந்துகள் பக்க
விளைவுகள் இல்லாமல் நல்ல பலனை அளிக்கும்.
மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க.
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை
அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line