Tuesday, March 26, 2013

ஞாபக சக்தியை அதிகரிக்க உணவும் சிகிச்சையும்






ஞாபக சக்தியை அதிகரிக்
நினைவாற்றல் திறன் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
Ø  வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இக்கீரையை நிழலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை மாத்திரைகளை பயன்படுத்தலாம். கேப்ஸ்ய்யூல்கள் பயன் படுத்த வேண்டாம்.
Ø  பள்ளி செல்லும் மாணவர்களும் பெரியவர்களும் நினைவாற்றலை அதிகப்படுத்திக்கொள்ளவும்  நரம்புகளைப் வலுப்படுத்தவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு காலையில் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கி  பருப்பை அரைத்து சாப்பிட வேண்டும். 100 கிராம் பாதாம் பருப்பில் 490 மில்லி கிராம் பாஸ்பரஸ், தாது உப்பு இருக்கிறது. குளுட்டாமிக் அமிலமும் இருக்கிறது.
Ø  இருபது கிராம் அக்ரூட் பருப்புகளுடன் பத்து கிராம் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தால் மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும்.
Ø  அதிக செலவில்லாமல் சாப்பிட தினமும் 50 கிராம் வேர்க்கடலை போதும்.
Ø  ஞாபக சக்தியை அதிகரிக்கும் பழங்கள் ஆப்பிள். பேரீச்சை, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு முதலியன.
Ø  சமையலில் மிளகு சீரகம், ஆகியவை இடம் பெற வேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
Ø  கோதுமை, சோளம், பார்லி, காராமணி, பாசிப்பருப்பு, கேரட், தண்டுக்கீரை, பீட்ரூட், முருங்கைக்காய், சோயாபீன்ஸ், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, புதினா முதலியவற்றில் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இவை தவிர பால், தயிர் போன்றவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும்.

மனிதர்களுக்கு நினைவாற்றல் குறைந்து வருவதற்கு மிக முக்கியமான காரணம், கவலைதான். இரத்த சோகையும், மற்ற நோய்களினால் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூளைக்குச் சரியானபடி இரத்தம் கிடைக்காததும் காரணங்களாகும். மூளை சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.

மேலும் நினைவாற்றல் குறைபாட்டிற்கு பல மருத்துவ காரணங்கள் உள்ளன.
நினைவாற்றல் குறைபாட்டினால் உங்கள் பிள்ளைகளின் படிப்பு
பாதிக்கப்பட்டாலோ பெரியவர்களுக்கு தினசரி நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்ப்பட்டாலோ தாமதிக்காமல் மருத்துவரை அனுகவும்.
தகுந்த சிகிச்சை மேற்கொண்டால் நினைவாற்றல் குறைபாடு நோயிலிருந்து காத்துக்கொள்ளலாம்.

ஹோமியோபதி மருத்துவத்தில் நினைவாற்றல் குறைபாட்டிற்கு மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. சிறப்பு ஹோமியோபதி மருத்துவரிடம் நினைவாற்றல் குறைபாடு நோய்க்கு சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.     

மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்பு கொள்ளவும்   


எங்களின் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830
பாண்டிச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168


9786901830

Vivekanantha Clinic Health Line



Please Contact for Appointment