Wednesday, March 13, 2013

தாய்ப்பாலூட்டுவதால் கருத்தரிப்பு நடைபெறாதா?






கேள்வி: மதிப்புக்குரிய மருத்துவர் அவர்களுக்கு,
சமீபத்தில் குழந்தை பெற்று தாய்ப்பாலூட்டுகிறேன்.
தாய்ப்பாலூட்டுவதால் கருத்தரிப்பு நடைபெறாதா?
பாதுக்காப்பற்ற உடலுறவு கொள்ளலாமா?
தயவுசெய்து விளக்கவும்.

பதில்: உங்களைப் போல சமீபத்தில் தாயானவர்களுக்கு ஒரு இயற்கையான கருத்தடை சாதனம் இருக்கிறது. அது என்ன தெரியுமா, தாய்ப்பால் ஊட்டுவதுதான்!

குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் ஊட்டினாலே, அது கருத்தடை சாதனமாக செயல்படும். இதற்கு ஆங்கிலத்தில் Lactational Amenorrhea Method (LAM) என்று கூறுகிறார்கள். இது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட, கிட்டத்தட்ட 99% பயனளிக்கும். அதாவது நூற்றில் ஒரு பெண்ணுக்குத்தான், இந்த முறை பயனளிக்காமல் போகும்.

இந்த முறையான கருத்தடைக்கு நீங்கள் செய்ய/கவனிக்க வேண்டியவை:
v  இது குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு மட்டுமே பயனளிக்கும்.
v  குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக இருக்க வேண்டும் (ருசிக்காக மற்ற திரவங்களை கொடுக்கலாம்)
v  தாய், குழந்தைக்கு நேரடியாக பால் ஊட்ட வேண்டும். பம்ப் போன்ற பொருட்களை வைத்து பாலை உறிஞ்சி எடுக்கக் கூடாது.
v  பகல் நேரத்தில் குறைந்தது நான்கு மணி நேரங்களுக்கு ஒரு முறையும், இரவு நேரங்களில் ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறையும் பாலூட்ட வேண்டும்.
v  உங்கள் மாத விலக்கு வராமல் இருக்க வேண்டும். (முதல் இரண்டு மாதங்களுக்கு வரும் சொட்டு ரத்தம் போன்றவை கணக்கில் வராது)

இந்தக் கருத்தடை முறையின் சிறப்புகள்:
ü  எந்த விதமான பக்க விளைவுகளும் கிடையாது, இது இயற்கையின் கருத்தடை சாதனம் என்று சொல்லலாம்.
ü  எந்த செலவும் இல்லாதது.
ü  உடலுறவுக்கு முன் எந்த விதமான செயல்பாடுகளும் தேவை இல்லை.
ü  கிட்டத்தட்ட 99% பயனளிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த முறையில் உள்ள பிரச்சனைகள்:
Ø  தாய் தொடர்ந்து இரவும் பகலும் பால் ஊட்டுவதால் சலிப்பு தட்டலாம்.
Ø  இது குறுகிய கால கட்டத்துக்குத் தான் உகந்தது. குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்கு மட்டுமே வேலை செய்யும்.
Ø  பல தாய்மார்கள் ஆறு மாதம் கடந்தும் இது வேலை செய்வதாக நினைத்துக் கொண்டோ, அல்லது தேதிகளை சரியாக குறிக்காமல் விட்டோ, கர்ப்பமாக வாய்ப்புண்டு.

இந்த கருத்தடை முறையின் திறன் மிக அதிகம் என்பதால், மேலே கூறியவற்றை சரியாக கடைப்பிடித்தால், உங்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு கருத்தரிக்க வாய்ப்பு இல்லை.

ஆனாலும், ஒரு சதவீத வாய்ப்பு உள்ளதால், ஆணுறை போல ஒரு கருத்தடை சாதனத்தை உபயோகித்தால், கருத்தரிக்க அறவே வாய்ப்பு இல்லை


மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க. 



விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line



Please Contact for Appointment