கேள்வி: நான் 24 வயது
பெண், எனக்கு மார்பகங்கள் சிறிதாக உள்ளது.
சிறிய மார்பகங்களை பெரிதாக்குவது எப்படி?
பதில்: மேலே உள்ள படத்தில், மஞ்சள்
பகுதி கொழுப்பு நிறைந்தது, பழுப்பு நிறத்தில் இருப்பவை Ducts என்று சொல்லப்படும் குழாய்கள். நீல நிறத்தில்
இருப்பது Lobule என்று சொல்லப்படும் மார்பகச் சுரப்பிகளாகும்.
ஈஸ்ட்ரோஜென் (Estrogen) என்ற ஹார்மோன்
மார்பகத்தில் உள்ள கொழுப்பை அதிகப் படுத்தும்.
ப்ரோஜெஸ்டிரோன் (Progesterone) என்ற ஹார்மோன
மார்பகத்தில் உள்ள சுரப்பிகளை அதிகப் படுத்தும்.
ப்ரோலக்டின் (Prolactin) என்ற ஹார்மோன்
மார்பகத்தில் சுரக்கும் பாலை அதிகப் படுத்தும்.
இளம் பெண்களுக்கு, மார்பகத்தில்
குறைந்து கொழுப்பே இருக்கும். அதே போல மார்பு மிக கெட்டியாக இருக்கும். வயதாக ஆக, மார்பில்
கொழுப்பு கூடி, கொஞ்சம் மென்மையாக ஆகி விடும்.
மார்பகத்தை பெரிதாக்குவதற்காக பல வழிமுறைகள் உள்ளன:
இயற்கையான மூலிகை எண்ணை:
இயற்கையிலேயே கிடைக்கும் மூலிகைகளை எண்ணையிட்டு காய்ச்சி அந்த
தைலத்தை மார்பகங்கள் மீது தடவிக்கொள்ளலாம். மேலே சொன்ன ஹார்மோன்கள் கீழ்கண்ட மூலிகைகளில்
நிறைந்து இருக்கின்றன. சில மூலிகைகள் சாப்பிடக் கூடியவையாக இருந்தால், அவற்றை
சாப்பிடவும் செய்யலாம்.
Ø சோம்பு
மற்றும் வெந்தய விதைகளில் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) என்ற ஹார்மோன்
உள்ளது.
Ø டேண்டேலியன் ( Dandelion ) , Kelp (கடல் பாசி) , ஜின்செங்
(Ginseng) போன்றவையும் பயன் தரும்.
இதனுடன் மேலும் சில மூலிகைகள் கலந்து காய்ச்சிய தைலம் உண்டு.
அதை உபயோகித்தால் நல்ல பலன்கிடைக்கும். இதனால் பக்க விளைவுகள் ஏதும் இல்லை.
இந்த மூலிகை தைலத்தின் பலன் உங்கள் வயதுக்கும், ஹார்மோன்
சுரக்கும் அளவுகளி படி மாறு படும்.
மார்பகத்துக்கான பம்ப்:
மார்பகத்துக்கான பம்ப் என்பது, தாய்ப்பாலை
உறிஞ்சி எடுக்க மட்டும் பயன்படுத்துவதில்லை. இந்த பம்புகளை மார்பகம் வளரவும் பயன்படுத்தலாம். மார்பகத்தை இதனை வைத்து இரண்டு இஞ்ச் வரை பெரிது படுத்தலாம். இந்த பம்பை மார்பில் பொருத்தி, நடுவில்
உள்ள விசையை அமுக்கி மார்புகளில் ஒரு காற்றழுத்தத்தை உண்டாக்க வேண்டும். மெல்ல மெல்ல, அழுத்தத்தை
அதிகப்படுத்த வேண்டும். கவனமாக செய்யுங்கள், அழுத்தத்தை
ரொம்ப அதிகப் படுத்தினால், நெஞ்சில் தோல் வெளிறி விடும், அல்லது
புண்ணாக வாய்ப்புண்டு. இந்த முறையை தினம் இரண்டு முறை 10-15 நிமிடம்
வரை செய்யலாம். ஆனால் இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட முறை அல்ல. இதன் பலன் செய்யும்
முறை மற்றும் ஹார்மோனின் அளவு பொருத்து மாறுபடும்.
மார்பகத்துக்கான உடற்பயிற்சிகள்:
மார்பகத்தை வளரச் செய்ய எந்த பயிற்சியினாலும் முடியாது. ஆனால், இந்த பயிற்சிகள்
மூலம் உங்கள் மார்பில் உள்ள தசைகள் விரிந்து, கடினமாகி, பெரிதாக
காட்டும்.
ப்ளை அப் (Fly up)
ஒன்றிலிருந்து இரண்டு
கிலோ எடை உள்ள டம்பெல்களை எடுத்துக் கொள்ளுங்கள். படுத்துக் கொண்டு, இந்த டம்பெல்களை
மேலே தூக்கி பயிற்சி செய்யுங்கள். பத்து பத்தாக, இரண்டு
முதல் மூன்று முறை செய்யுங்கள்.
தண்டால்:
இந்த முறையான உடற்பயிற்சியும் உங்கள் மார்புத் தசையை விரிவாகி, உங்கள்
மார்பகத்தை பெரிதாகக் காட்டும்.
யோகாசனம்:
மார்பு விரிவடைய, வலுவடைய, பல யோகாசன
நிலைகள் உள்ளன. அவை.
ü புஜங்காசனம்:
ü அர்த்த
மத்யேந்திராசனம்
ü சூரிய
நமஸ்காரம்
ü விருக்ஷாசனம்
வெளியே அணியக்கூடிய பொருட்கள்:
முதலில் நீங்கள் உங்களுக்கு சரியான அளவு பிராவை வாங்க வேண்டும்.
நீங்கள் இப்போது அணியும் பிராவின் அடுத்த அளவு, அதற்கு
முந்தைய அளவு என்று எல்லா சைஸ் பிராவையும் அணிந்து பார்த்து, பொறுமையாக
தேர்ந்தெடுங்கள்.
இப்போது புஷ் அப் பிரா (Push up bra) என்பது
பிரபலமாக உள்ளது.. இதை அணிந்தால், உங்கள்
மார்பு பிளவை (cleavage) பெரிதாகக் காட்டும்.
(Padded bras) பேட் வைத்த பிரா உங்கள் மார்பகத்தைப்
பெரிதாகக் காட்டும்.
இவை 100% சிலிகான்
(Silicone) என்ற பொருளினால் செய்யப்படுகிறது. இதே பொருள்தான் மார்பக அறுவை சிகிச்சை முறையிலும் உபயோகப் படுத்துகிறார்கள். இது எந்த நிறமும்
இல்லாதது, மென்மையாக இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், இவற்றை
உங்கள் பிராவில் செருகிக் கொள்ள வேண்டியது தான். மார்பு பெரிதாக தெரிய வேண்டும் என்றால்
இவற்றை மார்பகத்தின் மேல் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் மார்பு மேல் நோக்கி இருக்க வேண்டும் என்றால், இவற்றை
மார்பகதுக்குக் கீழே வையுங்கள். மார்புப்பிளவை பெரிதாகக் காட்ட, மார்புகளின்
பக்க வாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். குறைந்த செலவு, நிறைந்த
பயன் அளிக்கக் கூடியது. எந்த விதமான உடைகளோடும் அணியலாம், பார்ப்பவருக்கு
வித்தியாசமே தெரியாது.
அறுவை சிகிச்சை:
மார்பைப் பெரிதாக்க அறுவை சிகிச்சை: நீங்கள் அறுவை சிகிச்சை
பெற விரும்பினால், முதலில் இந்த சிகிச்சை நிபுணரிடம் நீங்கள் ஆலோசனை பெற வேண்டும்.
அவர் உங்களுக்குடைய மார்பு எந்த அளவு, மற்றும்
வடிவம் பெற வேண்டும் என்பது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வார்.
இந்த வகையான அறுவை சிகிச்சையை ஆங்கிலத்தில் (Breast
Augmentation Surgery) என்று பெயர். மார்பகதிற்குள்ளே, சிலிகான்
பைகளை வைத்து தைத்து விடுவார்கள். உங்கள் மார்பகம்
அறுவை சிகிச்சை முடிந்த உடன் பெரிதாகக் காட்டும். இந்த அறுவை சிகிச்சைகள் பெரிய மருத்துவமனைகளில்
செய்கிறார்கள். உங்களுக்கு பண வசதி இருந்தால், இந்த முறையை
பயன்படுத்திக் கொள்ளலாம்.
மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சையை முடிப்பார்கள், இதற்கு
சில மணி நேரங்களே ஆகும். அதற்குப் பிறகு சில நாட்களுக்கு உங்களுடைய மார்புகள் (Surgical
Bra) சர்ஜிகல் பிராவால் மூடப்பட்டிருக்கும்,
சிகிச்சைக்குப் பிறகு:
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இரண்டு
மூன்று நாட்களில் நடமாட ஆரம்பித்து விடலாம்.
தையல் ஒரு வாரத்தில் கரைந்துவிடும். சப்போர்டிங் பிரா (Supporting
Bra) அணிந்து கொள்ள வேண்டும். உடலில் உள்ள வீக்கங்கள் 3-4 வாரங்களில்
சரியாகி விடும். அதற்கு மேலும் வீக்கமோ, அல்லது
வலியோ இருந்தால், அறுவை சிகிச்சை நிபுணரை ஆலோசிக்க வேண்டும்.
இந்த அறுவை சிகிச்சையால் பல பிரச்சனைகள் பக்கவிளைவுகள் வர வாய்ப்புண்டு.
எனவே அறுவை சிகிச்சைக்கு முன் நன்கு யோசித்து முடிவெடுப்பது நல்லது.
எனவே பாதிப்பில்லாத மூலிகை எண்ணை உபயோகிப்பது நல்ல பலனை அளிக்கும்.
மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க.
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை
அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line