மார்பகக் கேன்சரை ஆரம்ப நிலையிலேயே
கண்டுபிடிக்க முடியுமா டாக்டர்?
சுய மார்பக பரிசோதனை எப்படி செய்வது?
மார்பகக் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க முடியும். மாதந்தோறும் மாதவிடாய்
முடிந்த ஏழு நாட்களுக்குப் பிறகு உங்கள் மார்பகங்களை நீங்களே தடவிப் பார்த்து
மார்பகத்தில் கட்டியோ அல்லது தோலில் தடிப்புகளோ தட்டுப்படுகிறதா எனப் பார்க்கலாம்.
வருடந்தோறும் மேமோகிராம் பரிசோதனை செய்து கொள்ளலாம். இதனால் ஆரம்பத்திலேயே
மார்பகக் கேன்சரை கண்டுபிடித்து முழுதாக குணமாக்கிவிட முடியும்.
v மார்பக சுய பரிசோதனை செய்வது
முப்பது வயதைத் தாண்டிய ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்லது. இந்தப் பரிசோதனையை கண்ணாடி
முன் நின்றும் செய்யலாம். படுத்துக்கொண்டும் சுய பரிசோதனை செய்யலாம்.
v முதலில் கண்ணாடி முன் நின்று இரண்டு
மார்பகங்களையும் நிதானமாக கூர்ந்து கவனிக்கவேண்டும். மார்பகங்களின் அளவிலோ, உருவிலோ மாற்றங்கள் தெரிகிறதா
என்பது பார்க்கவேண்டும்.
v அடுத்ததாக மார்புக் காம்பிலிருந்து
நீர் அல்லது இரத்தம் கலந்த நீர் வடிகிறதா, மார்புக் காம்பைச் சுற்றியுள்ள
கருமையான பகுதியில் புண் ஏதும் இருக்கிறதா, மார்புக் காம்பு உள்ளிழுக்கப்பட்டு
இருக்கிறதா, மார்பகங்களில்
மேலாகத் தோலின் நிறத்தில் மாறுபாடு தெரிகிறதா, அல்லது அந்த இடத்தில் சொரசொரப்பாக
இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். பின்பு கைகளை தலைக்கு மேலாகத் தூக்கிக்கொண்டு
இடது மார்பகத்தை (கடிகாரச் சுற்றில்) வட்ட வடிவில் லேசாக அழுத்தித் தடவி கட்டியோ, தடிப்போ தட்டுப்படுகிறதா என்று ஆராயவேண்டும்.
v அதேபோல் இடது கையால் வலதுபுற
மார்பகத்தை ஆராயவேண்டும். இப்படி செய்யும்போது, மார்பகத்தை ஒட்டிய அக்குள்
பகுதிகளையும் தொட்டுப் பரிசோதனை செய்யவேண்டும். இப்படித் தடவி பரிசோதனை
செய்யும்போது, விரலின்
நுனிப் பகுதியைப் பயன்படுத்தக்கூடாது. பட்டையான விரல் பகுதியைத்தான்
பயன்படுத்தவேண்டும்.
v இப்படி தன்னைத்தானே மாதந்தோறும்
பரிசோதித்துக் கொள்ளும்போது, சின்னதாக
மிளகு சைஸில் ஒரு கட்டி இருந்தால்கூட கண்டுபிடித்துவிட முடியும். அதனால் உடனடியாக
ட்ரீட்மெண்டும் மேற்கொண்டு குணமாகும் வாய்ப்பும் உள்ளது! ஆனால், எப்போதாவது தன்னை சுயப் பரிசோதனை
செய்யும் பெண்கள் கொண்டைக் கடலை அளவுக்குப் பெரிய கட்டியைத்தான் தடவி கண்டுபிடிக்க
முடியும்! எப்போதுமே சுய பரிசோதனை செய்யாத பெண்கள் காலங் கடந்தே அதாவது கட்டி
நாலணா அளவிற்குப் பெரிதான பின்பே பெரும்பாலும் கண்டுபிடிக்கிறார்கள்.
v வருடத்திற்கு ஒருமுறை மேமோகிராம்
சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் ஆரம்பநிலையிலேயே மார்பகக் கேன்சரை கண்டுபிடிக்க
முடியும்!
v பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள்
வருடந்தோறும் மேமோகிராம் செய்து கொள்ள வேண்டும். 40 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த
பரிசோதனை செய்தால், மார்பகச்
சதை அடர்த்தியாக இருப்பதால் துல்லியமாக கண்டுபிடிக்கமுடியாது. அதனால் அந்த
வயதினருக்கு சுய பரிசோதனை மிகவும் அவசியம்.
For more
details & Consultation Feel free to contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai:- 9786901830
Panruti:- 9443054168
Pondicherry:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us.
For appointment: SMS your Name -Age – Mobile Number - Problem in Single word -
date and day - Place of appointment (Eg: Rajini- 30 - 99xxxxxxx0 – Psoriasis –
21st Oct, Sunday - Chennai ). You will receive Appointment details through SMS
==--==