Thursday, March 7, 2013

கருத்தரிக்க தாமதமா - காரணமும் சிகிச்சையும்

கருத்தரிக்க கவனிக்க
கருத்தரிக்க முக்கியமான விஷயம் என்ன?
கர்ப்பமாக முக்கியமான விஷயம் என்னவென்றால், பெண் மற்றும் ஆணின் வயது தான். இவர்களின் வயதுதான் குழந்தை பெரும் வாய்ப்புகளை தீர்மானிக்கிறது. சமூகம் மற்றும் கலாச்சார ரீதியாக திருமணத்திற்கு பின் கருத்தரித்தல் நல்லது.

கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன?
பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு  உடல் ரீதியாக மிக சரியான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள்

எனக்கு 22 – 26 வயதிற்கு மேல் ஆகிறது எனறால் எனக்கு குழந்தை பிறக்காதா?
அப்படி இல்லை. இந்த வயதுக்கு மேல், உங்களுக்கு வயது அதிகமாக அதிகமாக, நீங்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும்.


ஆண்களின் வயது கர்ப்பத்துக்கு முக்கியம் இல்லையா?
இதுவும் ஓரளவுக்கு முக்கியமே, ஆனால் பெண்ணின் வயது அளவுக்கு முக்கியமானது அல்ல. இதற்குக் காரணம், பெண்கள் பிறக்கும் போதே, அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப் படுகின்றன. இந்தக் கருமுட்டைகள் வயதாக வயதாக, எண்ணிக்கையிலும் ஆரோக்கியத்திலும் தரம் குறைந்து போய் விடும். ஆனால் ஆண்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு விந்துக்கள் (Semen) தினம் உருவாகும். ஆண்களுக்கும் விந்து உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் வயதாக, ஆக, குறையும்.

நான் கர்ப்பமாக முயலும்போது என்ன செய்ய வேண்டும்(what can I do for pregnancy)?
எந்த நாட்களில் நீங்கள் உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்பது தான் இதற்கு முக்கியம். பெண் வயதுக்கு வந்த பின், சராசரியாக இருபதெட்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று பெல்லோபியன் குழாய் (Fallopian tube) வழியாய் கீழிறங்கும். இதற்கு முட்டை வெளிப்படுதல் (ஓவுலேஷன் - ovulation) என்று பெயர். இவ்வாறு கரு முட்டை, கருப்பையில் இருந்து வெளிவந்து, 18- 24 மணி நேரத்துக்குள் ஆணின் விந்துவை சேர வேண்டும். அதனால் இந்த கால கட்டத்தில் உங்கள் கருப்பையில் (Uterus) விந்தனுக்கள் (Sperms) இருக்க வேண்டும். ஆணின் விந்தனுக்கள் (sperm) சராசரியாக 3 – 5 நாட்கள் வரை பெண்ணின் பெண்ணுறுப்பில் உயிரோடு இருக்கும்.

உடலுறவு கொள்ள சரியான கால கட்டம் எது (what is the right days for intercourse)?
உங்கள் முட்டை வெளி வரும்போது, அதாவது ஒவுலேஷன் (Ovulation) நடக்கும்போது, அதற்கு இரண்டு நாட்கள் முன்னாலும், இரண்டு நாட்கள் பின்னாலும், உடலுறவு கொள்வது மிகுந்த பயனளிக்கும்.

எனக்கு முட்டை வெளிப்படும் (Ovulation) காலம் நடக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வது (how to find the ovulation periods)?
உங்களுக்கு இந்த நாட்களில் உடலில் பல மாற்றங்கள் நடக்கும். அவற்றை கவனித்து உங்களுக்கு இந்த நிகழ்வு நடக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.
  • உங்கள் பெண்ணுருப்பிலிருந்து வரும் திரவம் (Cervical mucus) மிகவும்   வழவழப்பாகவும், ஈரமானதாகவும் ஆகி விடும்.
  • மார்பகங்கள் மென்மையாக ஆகும். வயிறு சுண்டி இழுப்பது போல இருக்கும் (belly cramps), காம வேட்கை அதிகரித்தல், ரத்தச் சொட்டுக்கறை (spotting), உங்கள் கணவருக்கு அருகிலேயே இருக்கத் தோன்றும். உடலுறவில் நாட்டம் அதிகரிக்கும்.
  • முட்டை கருப்பையில் இருந்து வெளி வந்தததும் உங்கள் உடல் வெப்பம் 0.4°F – 0.8°F அதிகமாகும். நீங்கள் டிஜிட்டல் தெர்மாமீட்டர் (Digital Thermometer) ஒன்றை கடையிலிருந்து வாங்கி வந்து, உங்கள் உடல் வெப்பத்தை பட்டியல் போட்டு, இந்த காலத்தை கண்டு பிடிக்கலாம். உடல் வெப்பத்தை சாதாரனமாகவே நீங்கள் உணர முடியும். அக்குள் மற்றும் மார்பின் கீழ்பகுதி தொடைகளில் சூடாக உணர்வீர்கள்.
  • உங்களுக்கு மாத விலக்கு ரொம்ப சீராகவும், சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறையும் நடந்தால், உங்கள் முட்டை வெளிப்படும் (Ovulation) நாள் சரியாக 14 ஆம் நாள் நடக்கும். உங்களுக்கு மாதவிலக்கு சீராக வரவில்லை என்று சொன்னால், முட்டை வெளிப்படும் நாள் என்பது, உங்கள் மாத விலக்கு ஆரம்பிக்கும் நாளிலிருந்து சரியாக 14 நாட்கள் முன்னால் நடக்கும். உதாரணமாக, உங்கள் மாதவிலக்கு சுழற்சி 31 நாட்கள் என்றால், உங்கள் முட்டை வெளியீடு நாள் 31- 14 = 17. 17ஆம் நாள் தான் உங்கள் முட்டை வெளிப்படும் நாள்

நான் கர்ப்பமடைய முயற்சி செய்யும் போது எதை எதை தவிர்க்க வேண்டும் (What should I avoid while try to conceive)?
ü  உடலுறவின் போது நீங்கள், எண்ணெய், எச்சில், ஜெல் (Oil, Saliva, Gel) போன்றவை பயன்படுதினால், அவற்றை நிறுத்தி விடுங்கள். ஏனென்றால் இவை விந்துவுக்கு ஆபத்து விளைவிக்கும்.
ü  குழந்தைகளுக்கான எண்ணெய் (baby oil) தான் ஓரளவு ஆபத்து இல்லாதது. முடிந்த வரை எந்த விதமான லூப்ரிகன்ட் (Lubricant) பொருட்களை உபயோகிக்காமல் இருப்பதே நல்லது.
ü  பல பெண்கள் உடலுறவு முடிந்ததும் தங்கள் குறியை சுத்தம் (Vaginal Douche) செய்ய பல திரவங்களையும், தண்ணீரையும் உள்ளே பீய்ச்சி அடிக்கிறார்கள். நீங்கள் கருத்தரிக்க நினைக்கும் கட்டத்தில் இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இத் திரவங்கள் விந்தனுக்களை அழிப்பதுடன், பெண்ணுறுப்பில் உள்ள திரவங்களின் தன்மையையும் மாற்றி கர்ப்பமடைய விடாமல் தடுக்கும்.

எந்த முறையில் (Positions) உடலுறவு கொண்டால், கருத்தரிக்க வசதியானது?
எந்த முறையில் (Positions) உடலுறவு கொண்டால், கருத்தரிக்க வசதியானது என்ற சந்தேகம் எழலாம். ஒரு குறிப்பிட்ட முறையில் உடலுறவு (Intercourse Positions) கொண்டால், கருத்தரிக்க அதிக வாய்ப்பு உள்ளதற்கான அறிவியல் ஆதாரம் ஏதுமில்லை. வழக்கமான உடலுறவு நிலை, அதாவது, ஆண் மேலே படுத்து பெண் கீழே படுத்து உடல் உறவு கொண்டாலே போதுமானது.

கவனிக்க:
கர்ப்பம் தரிப்பது சற்று பயமாக இருக்கலாம், ஆனால் கர்ப்ப காலம் என்பது ஒரு மகிழ்ச்சியான விஷயம். இங்கே தரப்பட்டுள்ள பட்டியலையும்,(Ovulation Calendar)  நாள்காட்டியையும் உபயோகித்து உங்கள் மாதவிடாயையும், முட்டை வெளியீட்டையும் கணக்கெடுத்து கொள்ளுங்கள். கருத்தடை சாதனங்களை நீங்கள் உபயோகப் படுத்தினால்அவற்றை நிறுத்தி விடுங்கள். கருத்தடை மாத்திரைகளோ, அல்லது காப்பர் டி (Copper-T) போன்றவை உபயோகித்தால், மேலே சொன்ன சாதனங்களை நிறுத்திய பிறகு, உங்களுக்கு சீரான மாதவிடாய் வரும் வரை காத்திருந்து, பின் கருத்தரிக்க முயலுங்கள். ஒரு நல்ல மருத்துவரை அணுகி எவ்வளவு நாட்கள் கழித்து கருத்தரிக்கலாம் என்று கலந்து ஆலோசியுங்கள்.

கருத்தரிப்பதில் தாமதமா?
பெண்களுக்கு சில குறைபாடுகள் இருந்தால் கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படலாம். முறையான சிகிச்சை மேற்கொள்வதின் மூலம் குறைகளை குணப்படுத்த முடியும்.

பெண்களுக்கான குறைகள்
Ø  பிறவியிலேயே கருப்பை, சினைப்பை, கருக்குழாய் வளர்ச்சியின்மை.(Immature Uterus, ovaries, Fallopian tube)
Ø  கருப்பை கட்டிகள்கருப்பை இறங்குதல்.(uterine fibroid, uterine prolapse)
Ø  கர்ப்பப்பை மென்தோல் பாதிப்பு (endometriosis)
Ø  இரட்டை கர்ப்பப்பை (Bicorbenate Uterus)
Ø  சினைப்பை அழற்ச்சி (Ovaritis)
Ø  சினைப்பை கட்டிகள் (Ovarian Cryst)
Ø  கருக்குழாய் அடைப்பு( tubal block)
Ø  வெள்ளைப்படுதல்.(Leucorrhoea – White Discharge)
Ø  மாதவிடாய் கோளாறுகள் (Dysmennorrhoea – வலியுடன் கூடிய மாதவிடாய்,
Ø  அதிக ரத்தப்போக்கு, மாதவிடாய் நாள் தவறி வருதல் – Irregular Menses)
Ø  தொடர் கருச் சிதைவு (Habitual abortion)
Ø  உடல் பருமன் (Obesity)
Ø  கன்னிதிரை கிழியாமல் இருத்தல்.(Thick hymen)
Ø  சுரப்பி இயக்கக்கோளாறுகள் தைராய்டு(Thyroid Problems) பிட்யூட்டரி,
Ø  சில தொற்று நோய்கள் (புட்டாளம்மை, காசநோய்-Tuberculosis, பால்வினை நோய்கள்-Sexually Transmited Disease)
Ø  சில மருந்துகள் (அதிகமான ஆங்கில வலி நிவாரணி மாத்திரைகள்-Pain Killeres, பாலுணர்ச்சி தூண்டும் மருந்துகள்)



மேலும் ஆலோசனைக்கும், சிகிச்சைக்கும் மருத்துவரை தொடர்பு கொள்ளவும்



விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line

இனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெறலாம்

இனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெற வழிமுறைகள்

1-   மருத்துவரை தொடர்புகொண்டு உங்கள் நோயின் தன்மை குறித்து விவரிக்கவும், அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்
2-   மருத்துவர் உங்களுக்கு நோயாளியின் முழு விபரக்குறிப்பு கேள்விகளை (Questionnaire for patients) மின் அஞ்சல் மூலமாக அனுப்பி வைப்பார். நீங்கள் அதை தமிழிலோ ஆங்கிலத்திலோ விபரமாக நிரப்பி, உங்களிடம் மருத்துவ பரிசோதனை குறிப்புகளோ, பழைய மருத்துவ ஆலோசனை சீட்டுகளோ இருந்தால், இனைத்து மின் அஞ்சல் மூலமாக அனுப்பவும். மருத்துவருக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால் உங்களை மீண்டும் தொடர்புகொள்வார்,
3-   மருந்துகளுக்கான தொகையை இனைய வங்கி மூலமாகவோ  (Net Banking, Online Payments),  Western Union Money Transfer மூலமாகவோ, அல்லது எங்களின் வங்கிக்கணக்கிலோ செலுத்தியபின், பணம் செலுத்திய விபரத்தை மின் அஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ மருத்துவருக்கு தெரியப்படுத்தவும்.
4-   தொகை செலுத்தியது உறுதிசெய்யப்பட்ட பின் மருந்துகள் மற்றும் உபயோகிக்கும் முறை குறிப்புகளுடன் உங்களுக்கு தூதஞ்சல் மூலமாகவோ விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கப்படும்.
5-   இந்தியாவிற்குள் 4 to 7 நாட்களுக்குள்ளும், வெளிநாட்டிற்கு 7 to 15 நாட்களுக்குள்ளும் மருந்துகள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்படும்.
6-   மருந்துகள் கிடைத்தபின் உபயோகத்திலோ அல்லது வேறு ஏதேனும் சந்தேகமிருந்தாலோ தயக்கமின்றி மருத்துவரை தொடர்புகொண்டு விளக்கங்கள் பெறலாம்.


9786901830

Vivekanantha Clinic Health Line

Please Contact for Appointment