கருப்பை கட்டிகள் - பைப்ராயிட்
(Fibroid) கட்டிகள்
இது கருப்பையின் உட்புற
சதையில் இருந்து உருவாகும் கட்டியாகும். இது ஒரு கட்டியாகவோ (Single Fibroid) அல்லது ஒரு கருப்பையிலேயே பல
கட்டிகளாகவோ (Multiple Uterine Fibroids) இருக்கலாம்.
கருப்பை கட்டி என்ற உடனே நாம்
நினைப்பது அது புற்று நோயோ (cancer) என்றுதான்.
ஆனால் பைப்ராய்ட் கட்டி புற்றுநோய் வகையை சார்ந்தது அல்ல. இந்தக் கட்டி புற்று
நோயாக மாறுவதற்கான சந்தர்ப்பமும் மிகவும் குறவு. இதனால் fibroid கட்டிகள் உள்ளது என்றால் பயப்பட வேண்டியதில்லை.
இருப்பினும் கட்டியை பரிசோதித்து அது புற்று நோய் கட்டியல்ல என்று உறுதிப் படுத்திக்
கொள்வது நல்லது.
பொதுவாக 40 – 45 வயது பெண்களுக்கு
இந்த கட்டிகள் வரலாம். ஆனாலும் இது எல்லாப் பெண்களிலும் இது அறிகுறிகளை
வெளிக்காட்டாததால் நிறையப் பேருக்கு தங்களுக்கு இந்தக் கட்டிகள் இருப்பதே
தெரியாமல் போய் விடுகின்றது. இளம் பெண்களுக்கும் வரலாம்.
அறிகுறிகள்
Ø பைப்ராய்ட்
கட்டி உள்ள எல்லாப் பெண்களுக்கும் நோய் அறிகுறிகள் ஆரம்பத்தில் தெரிவதில்லை.
சிலருக்கு கீழ்கண்ட பொதுவான அறிகுறிகள் இருக்கலாம்.
Ø மாதவிடாய்
நேரத்தில் அதிகமான ரத்தப்போக்கு.
Ø நாட்பட்ட
இரத்தப்போக்கு. ஏழு நாட்களுக்கு மேலாக மாதவிடாய் போகுதல்.
Ø அடிவயிற்றில்
கனமாக எதோ இருப்பது போன்ற உணர்வு மற்றும் வலி.
Ø அடிவயிறு
வீக்கம்
Ø அடிக்கடி
சிறு நீர் கழித்தல் அல்லது சிறுநீர் வருவது போன்ற உணர்வு..
Ø மலச்சிக்கல்.
Ø இடுப்பு
மற்றும் கால் வலி – குடைச்சல்.
குழந்தையின்மைக்கு பைப்ராய்ட்
காரணமா?
ஆம், ஆனால் இந்த சந்தர்ப்பம் மிகக்குறைவு .மற்றும் இந்த
கட்டிகள் இருக்கும் எல்லாப் பெண்களுக்கும் இது ஏற்படுவதில்லை. மிகவும் அரிதாகவே
ஏற்படும்.
கருப்பையின் உட்புறமாக இல்லாமல் சற்று வெளிப்புறமாக இருக்கும்
கட்டிகளால் குழந்தை உருவாக்கத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.
பரிசோதனைகள்
ஸ்கேனிங் மூலம் பைப்ராய்ட்
கட்டி இருப்பதை உறுதிபடுத்த முடியும்.
மருத்துவ சிகிச்சை முறைகள்.
முதலில் மருந்துகள் மூலம்
சரி செய்ய முயற்சிக்கவேண்டும். மருந்துகள் பலனளிக்காத போது அறுவை சிகிச்சை
மேற்கொள்ளலாம்.
பைப்ராய்ட் கட்டி அறிகுறிகளை
ஏற்படுத்தாத வரையில் அகற்றப் பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதிகம் ரத்தம் போகுதல்
போன்ற பிரச்சினை ஏற்படுமானால் இது இரண்டு விதமாக அகற்றப்படுகிறது.
Hysterectomy - கருப்பைப்
பையோடு சேர்த்து அகற்றுதல்.
Myomectomy - கருப்பைப்
பை இருக்க கட்டி மற்றும் அகற்றப்படுதல். குறிப்பாக குழந்தை பெறுவதற்காக
காத்திருக்கும் பெண்களுக்கு இந்த வகை
உபயோகமாக இருக்கும்.
ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை
ஆரம்ப நிலை பைப்ராய்ட்
கட்டிகளுக்கு நோய் அறிகுறிகளுக்கேற்ப்ப ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்ளும்போது நல்ல
பலனளிக்கும்.
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை
அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line
==--==