Thursday, January 31, 2013

மாதவிடாய் நிற்றல் - Menopausal Syndrome சிறப்பு சிகிச்சை மையம்





மாதவிடாய் நிற்றல்
மாதவிடாய் நிறுத்தம் என்பது ஒரு பெண்ணுக்குத் தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கும் அதன் பின்னரும் மாதவிடாய் வராமல் முற்றிலும் நிற்பது ஆகும்.   உடலில் உற்பத்தியாகும் பல்வேறு வளரூக்கிகள் (Hormones)  ஏற்ற - இறக்கங்களுக்கு உள்ளாகின்றன அவை ஒரு பெண்ணின் இனப்பெருக்க  சுழற்சியை நிறுத்துகிறது.  பொதுவாக 45-55 வயதுகளில் மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுகின்றது.

ஏன் நிற்கிறது
ஒரு பெண் கருவுறா விட்டால் ஒவ்வொரு மாதமும் முட்டைகள் விடுபட்டு மாதவிடாய் நிகழ்கிறது. பெண்களுக்கு வயதாகும் போது அந்த முட்டைகளின் எண்ணிக்கை குறைந்து வந்து 45-55 வயதுக்குள் அவை நின்று போகும். இதுவே மாதவிடாய் நிறுத்தம் ஆகும். இதனால் பெண் உடலில் உற்பத்தி ஆகும் ஈஸ்ட்ரஜன் (oestrogen) போன்ற வளரூக்கிகள் குறைகின்றன.

மாதவிடாய் நிறுத்தம் அடைந்த பெண் உடலுறவு ஆசையை முற்றிலும் இழப்பதில்லை. பெண்கள் தொடர்ந்து உடலுறவில் ஈடுபாடு கொள்ளலாம்.

பொதுவான அறிகுறிகள் -Common Symptoms
Ø  உடம்பு மற்றும் முகத்தில்  சூடான உணர்வு .- Hot Flashes
Ø  இரவில் திடீரென வியர்த்தல் -  Night Sweats
Ø  ஒழுங்கற்ற மாதவிடாய் -  Irregular Periods.
Ø  உடலுறவில் நாட்டமின்மை - Loss of Libido
Ø  பெண்குறி உலர்ந்து போகுதல் - Vaginal Dryness
Ø  கவலை மகிழ்ச்சி கோபம் மாறி மாறி வருதல் -Mood Swings
Ø  அசதி -Fatigue
Ø  முடி உதிர்தல் - Hair Loss
Ø  தூக்கமின்மை - Sleep Disorders
Ø  கவனமின்மை - Difficult Concentrating
Ø  ஞாபக மறதி - Memory Lapses
Ø  தலை கிறுகிறுத்தல் - Dizziness
Ø  எடை கூடுதல் - Weight Gain
Ø  அடிக்கடி சிறுநீர் கழித்தல் -  Incontinence
Ø  வயிறு உப்புதல் -Bloating
Ø  ஒவ்வாமை -Allergies
Ø  நகம் உடைதல் - Brittle Nails
Ø  உடலில் துர்நாற்றம் - Changes in Odour
Ø  ஒழுங்கற்ற இருதய துடிப்பு -Irregular Heartbeat
Ø  மன அழுத்தம் - Depression
Ø  மனக்கவலை - Anxiety
Ø  காரணமின்றி எரிச்சலடைதல் - Irritability
Ø  பேதித்தல் -Panic Disorder
Ø  மார்பில் வலி - Breast Pain
Ø  தலை வலி - Headaches
Ø  மூட்டு வலிகள் - Joint Pain
Ø  வாயில் நாக்கில் எரிச்சல் - Burning Tongue
Ø  மின்னல் போன்ற வலி, ஷாக் அடித்தது போன்ற உணர்வு - Electric Shocks
Ø  செரிமான கோளறுகள் - Digestive Problems
Ø  பல் ஈறுகளில் பிரச்சனை - Gum Problems
Ø  தசை விரைத்துபோகுதல் - Muscle Tension
Ø  தோலில் அரிப்பு - Itchy Skin
Ø  கை, கால் துடித்தல் -Tingling Extremities
Ø  எலும்பு வலுவிழத்தல் - Osteoporosis

உளவியல் விளைவுகள்
ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் நிற்பதால் உடலில் ஏற்படும் பல்வேறு விளைவுகள் உளவியல் பாதிப்பையும் தருகிறன.
ü  மனக்கலக்கம் (Anxiety),
ü  மன அழுத்தம்,
ü  சோம்பல்
ü  மனக்குழப்பங்கள்
ü  எரிச்சலடையும் தன்மை
போன்ற உளவியல் தாக்கங்கள் ஏற்படுகின்றன.

மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும்போதும், அதற்கு சிலகாலம் முன்பும், சில காலம் பின்பும் பெண்கள் அனுபவிக்கும் உடல் மற்றும் உளவியல் விளைவுகளை தகுந்த மருந்துகள் மூலமாகவும் உளவியல் ஆலோசனை மூலமாகவும் நிவாரணம் பெறலாம்.

மருத்துவ சிகிச்சை
நவீன மருத்துவத்தில் ஹார்மோன் ரீ பிளேஸ்மெண்ட் தெராபி எனப்படும் வளரூக்கிகள் மருந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் அந்த சமயத்தில் நிவாரணம் கிடைத்தாலும் பக்க விளைவுகள் பல உண்டாகலாம்.

ஹோமியோபதி மருத்துவம்
ஹோமியோபதி மருத்துவத்தில் நோயின் அறிகுறிகளுக்கேற்ப்ப சிகிச்சை அளிப்பதால் பக்கவிளைவுகளின்றி பலனடையலாம். மேலும் உளவியல் ஆலோசனை இந்த பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபட உதவியாக இருக்கும்.


விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line





==--==

Please Contact for Appointment