லிச்சன் பிளானஸ்
லிச்சன் பிளானஸ் நோய்
என்பது தோலிலோ அல்லது வாயிலோ வரும் அரிப்புடன் கூடிய தடிப்பாகும்.
லிச்சன் பிளானஸ் - காரணங்கள்
லிச்சன் பிளானஸ் வருவதற்கான
குறிப்பிட தகுந்த காரணங்கள் கண்டறியப்படவில்லை. இருந்த போதும்
- ஒவ்வாமை
மற்றும் எதிர்ப்புத்திறன் குறைபாடுகள் காரணமாக கருதப்படுகிறது.
- அதிகமாக
மருந்துகள் உட்கொள்வது, முடி சாயங்கள்,
சில வேதிப்பொருட்கள் ( தங்கம்,
ஆண்டிபயாட்டிக், ஆர்சனிக்,
அயோடைடுகள், குளோரோகுயின்,
நீரிளக்கிகள் உட்பட).
- ஹெப்படைடிஸ்
சி கூட காரணமாக இருக்கலாம்.
- லிச்சன்
பிளானஸ் பொதுவாக நடுத்தர வயதினரை தாக்குகிறது. குழந்தைகளை குறைவாகவே தாக்குகிறது.
அறிகுறிகள்
வாய்
Ø பாதிக்கப்பட்ட
பகுதி நீலம் கலந்த வெண்மை நிறத்துடனோ, முகப்பரு
போலவோ காணப்படும்.
Ø வாயில்
வலியுடன் கூடிய தடிப்பு ஏற்படும், சிலருக்கு
அந்த தடிப்பை தொட்டாலோ, நாக்கு, உணவுகள் பட்டாலோ வலி
இருக்கும். ( ஆரம்ப நிலையின் எந்த ஒரு உணர்வும் இருக்காது)
Ø நாக்கின்
ஓரத்திலும் வாயின் உட்புறத்திலும் தடித்து கருத்த நிறத்துடன் காணப்படும்
Ø சிலநேரங்களில்
பல் ஈறுகளையும் தாக்கும்.
Ø தடிப்புகள்
பின்னிப்பினைந்த கோடுகளைப்போல் காணப்படும்.
Ø பாதிக்கப்பட்ட
பகுதி படிப்படியாக அதிகரித்துக்கொண்டே செல்லும்.
Ø சிலசமயம்
தடிப்புகள் புண்ணாக மாறும்.
தோல் அறிகுறிகள்
Ø பொதுவாக
கை, கால், தொடை, மற்றும்
இனப்பெருக்க உறுப்புகளில் தடித்து கறுத்து முண்டுமுண்டாக தோன்றும்.
Ø அரிப்பு
இருக்கும்,
Ø தடிப்புகள்
தனித்தனியாகவோ அடர்த்தியாகவோ காணும். தோலில் காயங்கள் ஏற்பட்டால் அங்கும் லிச்சன்
பிளானஸ் தோன்றும்
Ø தடிப்புகளின்
மீது வெண்மையாக
கோடு போல காணப்படும்.
Ø பளபளப்புடன்
செதில் செதிலாக இருக்கும்
Ø கருமை
நிறத்துடனோ, சிவந்தோ, ஊதாப்பூ நிறத்திலோ கூட தடிப்புகள் இருக்கும்.
Ø இந்த
தடிப்புகள் கொப்புளங்களாகவோ,
புண்ணாக மாறவோ கூட வாய்ப்புகள் உண்டு.
பிற அறிகுறிகள்
Ø வாய்
வறண்டு காணப்படும்.
Ø முடி
அதிகமாக கொட்டும்.
Ø வாயில்
இரும்பு வாடையோ, கெட்ட
வாடையோ வீசும்.
Ø நகங்கள்
தடிப்புடன் கறுத்து காணப்படும்.
ஆய்வக பரிசோதனைகள்
லிச்சன் பிளானஸ் நோய்க்கு
குறிப்பிட்ட பரிசோதனை
ஏதும் இல்லையென்றாலும் வாயிலோ தோலிலோ எடுக்கப்படும் சதை துணுக்கு பரிசோதனை வியாதியின் தன்மையை உறுதிபடுத்த உதவும்.
சிகிச்சைகள்
நவீன மருத்துவத்தில்
அரிப்பை தடுக்கும் மருந்துகளையும், ஸ்டீராய்டு
மருந்துகளையும் பரிந்துரைப்பார்கள். இது தற்காலிகமாக பலனளிக்கும்.
லிச்சன் பிளானஸ் - ஹோமியோபதி மருத்துவம்
ஹோமியோபதி மருத்துவத்தில்
நோயின் அறிகுறிகளுக்கேற்ப நோய் எதிர்ப்புதன்மையை அதிகப்படுத்தும் மருந்துகள்
உள்ளன. ஹோமியோபதி
சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்..
லிச்சன் பிளானஸ் நோயால்
பாதித்த பலருக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்த மருத்துவரை
தொடர்புகொள்ளவும் சிகிச்சைக்கும் இங்கே கிளிக் செய்யவும்.
லிச்சன் பிளானஸ்
பிரச்சனைக்காக சிகிச்சை பெற இங்கே கிளிக் செய்யவும்
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
==--==